Sunday, 12 January 2025

முத்தமிழும் உள்ள கலை தெருக்கூத்து மட்டும் தான் - புரிசை கண்ணப்ப சம்பந்தன் நேர்காணல்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமம் தெருக்கூத்திற்காக புகழ்பெற்றது. இங்கு "கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவு நாடகக் கலை விழா” நடைபெறுகிறது. 2024ம் ஆண்டில் அக்டோபர் 5, 6 தினங்களில் ‘புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்’ சார்பில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது....

துக்கம்: விழிப்பின்வழி உற்றறிதல் - பன்னீர் செல்வம்

மனித இனம் இதுவரை தோற்றுவித்த தத்துவங்கள் ஒவ்வொன்றும் துக்கம் குறித்தும் அதிலிருந்தான மீட்பு குறித்தும் வெவ்வேறு பார்வைகளை முன்வைக்கின்றன. உதாரணமாக, மார்க்சிய தத்துவம் மானுட துக்கத்துக்கான காரணம் வர்க்க பேதம் என்கிறது. முதலாளித்துவத்தின் பிறப்பிடமான அமெரிக்காவின் அரசியல் சாசனம் இன்பத்தை நாடிச்செல்வதற்கான...

இந்தியக் கவிதையியல் - 3: அலங்காரக் கொள்கையும் ரீதிக்கொள்கையும், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

பகுதி I: இலக்கண வளர்ச்சி அத்யாயம் 3: அலங்காரக் கொள்கையும் ரீதிக்கொள்கையும் பாரதீய நாட்டிய சாத்திரத்தில் நடனத்தின் பகுதியாகவே கவிதை இலக்கண அடிப்படைகள் வெளிப்பட்டன. அவை தனித்தன்மையான இடத்தைப் பெறவே இல்லை. இவ்வாறிருக்கும் நிலையில் தற்போது கிடைக்கும் அணியிலக்கண நூல்களில் பாமகரின் காவ்யலங்காரமும் தண்டியின்...

தொன்மங்களின் ஆற்றல் - 2: ஜோசப் கேம்ப்பெல்

பகுதி 1: தொன்மங்களின் ஆற்றல் - 1: ஜோசப் கேம்ப்பெல்மோயர்ஸ்: ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை என் இளைய மகன் பன்னிரண்டாவது அல்லது பதிமூன்றாவது முறையாக பார்த்தபோது நான் அவனிடம் "ஏன் இத்தனை முறை இப்படத்தைப் பார்க்கிறாய்?" என்று கேட்டேன். உடனே அவன் "நீங்கள் ஏன் பைபிளின் பழைய ஏற்பாட்டை வாழ்க்கை முழுவதும் வாசிக்கிறீர்களோ...

டுடன்காமுன் கல்லறை 1 - கார்ட்டர் அறிமுகம், பொன். மகாலிங்கம்

டுடன்காமுன் (இளவயது) வரலாறு விசித்திரமானது. யாரை வரலாற்றிலிருந்து துடைத்தொழிக்க வேண்டுமெனச் சிலர் விரும்பினார்களோ அதற்கு நேர்மாறாக நடப்பதுண்டு. தனக்குப் பிடிக்காதவர்களை இருந்த இடம் தெரியாமல் நசுக்கி அழித்து ஒழிக்க வேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட ஆட்சியாளர்கள் உண்டு. ஆனால், யாரை மறைக்க விரும்பினார்களோ...

ஆகமம் என்றால் என்ன? - எஸ்.கே. ராமச்சந்திர ராவ்

‘ஆகமம்’ என்னும் சொல் வழிபாடு சார்ந்த பண்டைய மரபையும், அதன் தத்துவ, உளவியல், சடங்கு மற்றும் நடைமுறை வழக்கம் சார்ந்த அம்சங்களையும் உள்ளடக்கியது. இவை வாய்மொழியாகவும் நூல்களாகவும் நம்மை வந்தடைந்துள்ளன. ஆகமங்கள் அனைத்து வழிபாட்டு முறைகளையும் உள்ளடக்கியது. உருவ வழிபாடு, அருவ வழிபாடு, தனிவழிபாட்டிற்காக ஒருவருடைய...

அம்பை மணிவண்ணின் சிற்பக்கலை : நூல் அறிமுகம் 1 - கடலூர் சீனு

இந்தியாவில் குறிப்பாக தமிழ் நிலத்தில் 2000த்தில் கோயிலை நோக்கிய பக்தர்களின் இணைப்பில் ஒரு பெரிய எழுச்சி நிகழ்ந்தது. பொருளாதார மாற்றம், இணைய தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த வேலை வாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் அன்றாடம் தாண்டியும் பயணிக்க முடிந்தது. பெருவாரியான மக்கள் ஒரு பண்பாட்டில்...