அறிமுகம்

இணையம் இந்த நூற்றாண்டின் பெரும்வாய்ப்பாக இருக்கிறது. இரண்டாயிரத்துக்கு பின் வந்த இணைய இதழ்கள் தமிழ் இலக்கியத்தை பதிப்பிதழ்களிடம் இருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வனவாக அமைந்தன.  இந்த வாய்ப்பின் வழி நிறைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நேற்றைய சிற்றிதழ்களின் தன்மையைக் கொண்டு இன்று இணைய இதழ்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும் பகுதியாகவும் நவீன இலக்கியம் சார்ந்த கவிதை, சிறுகதை, விமர்சனக்கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கலை, வரலாறு, தத்துவம், பண்பாட்டு ஆய்வுகள் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் அந்த பெரும்பெருக்கில் அவற்றுக்குண்டான முக்கியத்துவம் அடையாமல் போய்விடுகின்றன. அவற்றை மட்டும் பேசக்கூடிய ஒரு இணையதளம் கொண்டுவரும் எண்ணத்துடன் குருகு என்னும் இந்த இணைய இதழ் வலைப்பூ வடிவில்  துவங்கப்படுகிறது. 

இந்த தளத்தில் கலை, தத்துவம், வரலாறு சார்ந்த கட்டுரைகளை  தொடர்ந்து எழுதி வெளியிடப்படும். எழுபது, எண்பதுகளில் எழுத வந்த எழுத்தாளர்கள் தங்கள் பள்ளிகாலத்திலும் கல்லூரி காலகட்டத்திலும் கையெழுத்துப் பத்திரிக்கைகளை நண்பர்களுடன் நடத்தியதை கேள்விப்பட்டுள்ளோம். காகிதங்களில் தங்கள் கைகளாலேயே எழுதி அதை கைப்பிரதிகள்  எடுத்து நண்பர்களுக்குள் படித்துக்கொண்டது போலவே எங்களுடைய இந்த முயற்சியும் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை போலவே துவங்குகிறது. 

அனங்கன் 

தாமரைக்கண்ணன், புதுவை

தாமரைக்கண்ணன், அவினாசி


தொடர்புக்கு: kurugublog@gmail.com




அனங்கன்

பாடசாலையில் முறைப்படி  கிருஷ்ண யஜுர் வேதம் பயின்றவர். நவீன இலக்கியத்தை மிகுந்த விருப்புடன் கற்று வருகிறார். சில சிறுகதைகள், வெளிவந்துள்ளது. அசோகமித்திரன் ஜெயமோகன் இருவரையும் ஆசிரியர்கள் என கருதுபவர்.  சென்னையில் வசிக்கிறார்.

தாமரைக்கண்ணன், புதுவை

தாமரைக்கண்ணன் புதுச்சேரியில் வசிக்கிறார், சொந்த ஊர் திண்டுக்கல். வரலாறு, நாட்டாரியல் மற்றும் மரபிலக்கியம் மீது ஆர்வமுண்டு. பயணக்கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தில் கி ரா, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் மற்றும்  அ.கா. பெருமாள் இவர்களை தன் முன்னோடிகளாக கருதுகிறார் 

தாமரைக்கண்ணன், அவிநாசி 

தாமரைக்கண்ணன் தத்துவம் கலை சார்ந்த படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். தத்துவம் கலை நவீன இலக்கியம் ஆகியவற்றை தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறார். ஜெயமோகனை ஆசிரியராக நினைப்பவர். அவிநாசியில் தற்போது வசிக்கிறார்.